நடிப்பு பிடிச்சு போச்சு… யோகிக்கு சிபாரிசு செய்த நயன்தாரா

சென்னை:

நடிப்பு பிடித்து போனதால் முதல்முறையாக நயன்தாரா சிபாரிசு செய்ய படப்பிடிப்பு குழுவினரே வியப்பில் ஆழ்ந்து போய் உள்ளனர். அப்படி யாருக்கு அவர் சிபாரிசு செய்தார் என்கிறீர்களா?

அவர் வேறு யாரும் இல்லீங்க… காமெடியில் தற்போது கலக்கி எடுத்து வரும் யோகி பாபுதான். அட இதென்ன கூத்து என்கிறீர்களா? விஷயம் இருக்கே. கோலமாவு கோகிலா படத்தில் நயன் ஷோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். யோகிபாபுவும் காமெடியனாக நடித்துள்ளார். இதில் ஒரு பாடலில் யோகிபாபு, நயன்தாராவிடம் ப்ரோபோஸ் செய்யும் வீடியோ செம வைரலாகி அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் போது யோகிபாபுவின் நடிப்பு நயன்தாராவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். அப்புறம் என்ன? தான் நடிக்கும் அடுத்த படத்தில் யோகிபாபுவை காமெடியனாக நடிக்க புக் செய்யுங்கள் என்று சிபாரிசு செய்துள்ளார். இதுவரை நயன்தாரா யாருக்கும், எதற்கும் சிபாரிசு என்றே செய்ததில்லையே என்பதால் கோலிவுட் வட்டாரங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிதான் போய் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *