EVERGREEN HIT OF SELVA RAGHAVAN

என்றென்றும் நீங்கா இடம் பெற்ற செல்வராகவனின் தெலுங்கு படம்!

சுமார் 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படம் ‘ஆடவாரி மாடலுக்கு ஆர்தாலே வேருலே’. இந்தப்படம் இயக்குனர் செல்வராகவனின் ( ஸ்ரீ ராகவா என்பது தெலுங்கு சினிமாவில் அவருடைய பெயர்) முதல் தெலுங்கு மொழி திரைப்படமாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்ட படமாக இருந்தாலும், ஹீரோ வெங்கடேஷின் வழக்கமான துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது இதன் சிறப்பு. இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். இந்தப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் ஒரு நேர்காணலில் கூறும்போது, ‘வெங்கடேஷ் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நான் இந்தப்படத்தை இயக்கும் போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்தப்படத்தின் உருவாக்கத்திற்கு வெங்கடேஷ் பெரும் பங்கு ஆற்றினார். அவருள் ஒரு இயக்குனர் இருப்பதை நான் கண்டேன்’ என்றார். வெங்கடேஷும், திரிஷாவும் முதன்முதலாக ஜோடி சேர்ந்த படமாகும். கணேஷ் என்ற கதாப்பாத்திரத்தில் வெங்கடேஷும், துடுக்குடன், பணி நிமித்தமாக எதையும் விட்டுக்குடுக்காத பெண்ணாக திரிஷா நடித்திருந்தனர். ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கோட்டா ஸ்ரீனிவாச ராவ், மற்றும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஸ்வநாத் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, கோலா பாஸ்கர் எடிட் செய்ய, பாலமுருகன் ஒளிப்பதிவு செய்திருந்தனர். என் வி பிரசாத் மற்றும் சானம் நாக அசோக்குமார் இணைந்து ஸ்ரீ சாய்தேவா தயாரிப்பு நிறுவ்னம் சார்பாக தயாரித்து இருந்தனர். இந்த படம் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளிவந்து சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்கு மூன்று நந்தி விருதுகள் கிடைத்தது. அதாவது இந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த நடிகருக்கான விருது வெங்கடேஷுக்கும், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது ரமேஷ் – கோபிக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை பிலிம் பேர் சௌத் வழங்கியது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படம் “யாரடி நீ மோகினி” ஆகும். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவனின் துணை இயக்குனரான மித்ரன் ஜவகர் இயக்கினார். இந்த படத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், கார்த்திக் குமார், கருணாஸ், சரண்யா மோகன் மற்றும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான விஸ்வநாத் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் கட்சி தெலுங்கு படத்தில் இருந்து சற்றே வேறுபட்டு இருந்தது நினைவிருக்கலாம்

Leave a Reply